18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நடைபெற்ற சீதக்காதி புறா டோர்னமென்ட் கிளப்( Seethakathi Pigeon Tournament Club – SPTC) மற்றும்ERPC பரிசளிப்பு விழா..

கீழக்கரையில் நடைபெற்ற சீதக்காதி புறா டோர்னமென்ட் கிளப்( Seethakathi Pigeon Tournament Club – SPTC) மற்றும்ERPC பரிசளிப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் July 5, 2019, 4:40 pm

கீழக்கரையில் சீதக்காதி புறா டோர்னமென்ட்கிளப் (Seethakathi Pigeon Tournament Club – SPTC) மற்றும் ERPC  பரிசளிப்பு விழா04/07/2019 அன்று மாலை 07.00 மணியளவில் பழைய அப்சரா தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஈரோடு புறா யூனியன் புறா கலை சிகரம் கந்தசாமி அப்பன் தலைமை தாங்கினார்.  மேலும் கீழக்கரையில் சீதக்காதி புறா டோர்னமென்ட்கிளப் (Seethakathi Pigeon Tournament Club – SPTC) தலைவர் செய்யது இபுராஹிம், செயலாளர் சஃபி, துணை தலைவர் அகமது, துணைச் செயலாளர் மன்சூர், பொருளாளர் மகேந்திரன், ஆலோசகர்ஜமான், தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலியபெருமாள், சென்னை பரசு, ஏர்வாடி கலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில்  KING OF PIGEON என்ற நான்கு நாட்கள் போட்டியில் முதல் பரிசு ₹.30,001/-, இரண்டாவது பரிசு15,001/- மற்றும் PRINCE OF PIEGEON எனும் இரண்டு நாள் போட்டியில் முதல் பரிசு ₹.20,001/-, இரண்டாவது பரிசு10,001/- ஆகியவற்றை அஜீத் மற்றும் ஆதில் ஆகியோர் பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக கீழக்கரையில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!