17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக முதல்வர் தென்காசி வருகை-பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

தமிழக முதல்வர் தென்காசி வருகை-பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

எழுதியவர்: mohan July 5, 2019, 10:46 am

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை  06.07.19 சனிக்கிழமை தென்காசி வர உள்ளனர்.அமமுக-வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார். அவருடன் பலர் அ.தி.மு.க.வில் இணைகின்றனர். இதற்கான விழா தென்காசி இசக்கி மஹாலில் நாளை  06.07.19 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.அவர்கள் பங்கேற்கும் விழா நடைபெறவிருக்கும் இடத்திலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மேடையமைக்கப்படும் பகுதிகள்,வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதிகள் ஆகியவற்றை தென்மண்டல ஐ.ஜி (காவல்துறை தலைவர்) சண்முக ராஜேஸ்வரன் ,நெல்லை சரக டிஐஜி பிரதீப் குமார் அபிநவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் உள்ளிட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!