17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்.

நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்.

எழுதியவர்: mohan July 5, 2019, 10:41 am

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா திட்ட முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் 05.07.19 இன்று நடைபெறுகிறது.திருநெல்வலி, அம்பாசமுத்திரம், நான்குநேரி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் தாசில்தார்கள் தலைமையில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட நிலத்தாவாக்கள் குறித்த மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!