17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவன்.

இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவன்.

எழுதியவர்: mohan July 5, 2019, 10:10 am

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே மென்னந்தி நாகாச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 33. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமியை (26) காதலித்தார். இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆகாஷ், கனிஷ்கா என 2 குழந்தைகள் உள்ளனர்.. கணவன், மனைவி இடையே கடந்த ஓராண்டாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கணவன், அவரது தாயார், சகோதரி ஆகியோர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக 1 பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் சிவகாமி, 10 நாட்களுக்கு முன் புகார் அளித்தார். இந்நிலையில் மென்னந்தியில் தாய் வீடு சென்ற சிவகாமியை கயிற்றால் கழுத்தை நெரித்து ராஜா கொலை செய்து விட்டு தப்பினார். பரமக்குடி டிஎஸ்பி சங்கர் சம்பவ இடத்தில் விசாரித்தார். சிவகாமி உடலை சத்திரக்குடி போலீசார் கைப்பற்றினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!