17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரண்டு நாளாக இருளில் தவிக்கும் ராமநாதபுரம்

இரண்டு நாளாக இருளில் தவிக்கும் ராமநாதபுரம்

எழுதியவர்: mohan July 5, 2019, 9:56 am

இராமநாதபுரம் முழுவதும் நேற்று முன்தினம் ( 03/7/2019) மாலை 6:30 மணியளவில் மின்சாரம் விட்டு விட்டு வந்தது. இரவு 7 மணி அளவில் பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, நகர் பகுதி முழுவதும் மின் சாரம் தடை பட்டது. ராமநாதபுரத்தில் திடீர் மின் வெட்டால் இரவு முழுவதும் பொதுமக்கள் துாங்கமுடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். ராமநாதபுரத்தில் அடிக்கடி மின் தடைபடுவதால் பொதுமக்கள் இடையே வழிப்பறி, திருட்டு பயம் நிலவுகிறது. ராம     நாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. டீசலுக்காக ஜெனரேட்டர் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். இரவு முழுவதும் மின்சாரம் தடை தொடர்ந்ததால் ஓட்டல்கள் விரைவாக மூடப்பட்டன. கிரைண்டர், மிக்ஸி இயக்க முடியாததால் சமையலுக்கு ஓட்டல்கள், வீடுகளிலும் மக்கள் தவித்தனர். ஜூலை 3 இரவு 7 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை 14 மணி நேர மின் தடையால் தடையால் பல ஓட்டல்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு மீண்டும் வந்த மின்சாரம் சில மணி நேரம் மட்டும் நீடித்தது. வருவதும், போவதுமாக போக்கு காட்டிய மின்சாரம் இரவு 6 மணியளவில் தடைபட்டு விடிய, விடிய ஓய்வெடுத்துக் கொண்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போன், சிம்னி விளக்கு வெளிச்சம், மெழுகுவர்த்தி ஒளியில் படித்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வழுதுாரில் இருந்து ஆர்.எஸ்., மடை துணை மின் நிலையத்திற்கு செல்லும் வழியில் 110 கே.வி., லைனில் ஒரு இடத்திலும், ஆர்.எஸ்.மடை., காவனுார் இடையே ஒரு இடத்திலும் ஜூலை 3 ஆம் தேதி இரவு 7 மணியளவில் பழுது ஏற்பட்டது. பழுதை கண்டறிய பல மணிநேரமானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளது. காவனுார் மின்நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்., மடை வரை பாலிமர் டிஸ்க் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவடைந்தால் இது போன்ற பழுது குறையும் என்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி மின் தடைபடுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். ஒரு மின் பாதையில் பழுது ஏற்பட்டால், மற்றொரு மின் பாதை மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மாற்று திட்டங்களை செயல்படுத்த மின் வாரியம் முன் வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!