17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் சேவையே என் முதல் பணி…கீழக்கரை வருவாய் ஆய்வாளர் சாரதா சிறப்பு பேட்டி…

மக்கள் சேவையே என் முதல் பணி…கீழக்கரை வருவாய் ஆய்வாளர் சாரதா சிறப்பு பேட்டி…

எழுதியவர்: ஆசிரியர் July 4, 2019, 11:05 pm

கீழக்கரை வருவாய் ஆய்வாளராக சிறப்பாக பணி செய்து வருபவர் திருமதி சாரதா B.Com பட்டதாரியான இவர் மக்கள் சேவையே தனது முதல் பணி என்று சிறப்பாக பணி ஆற்றி வருகின்றார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக சிறப்பாக பணி புரிந்த இவரை அரசு கீழக்கரை வருவாய் ஆய்வாளராக பணியமர்த்தியது. வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்த நாள் முதல் அனைத்து தரப்பு மக்களின் சான்றிதழ்கள், அரசு நிதி சம்பந்தப்பட்ட மனுக்கள்,வருவாய் சான்று, இருப்பிட சான்று, மற்றும் சாதி சான்றுகளை முறையாக நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மனுக்களை வட்டாச்சியருக்கு உடனடியாக பரிந்துரை செய்கின்றார்.

இதன் மூலம் இப்பகுதி மக்களின் நன் மதிப்பை பெற்று வருகிறார். இவர் கணவர் இராமநாதபுரம் மாவட்ட நீதி மன்றத்தில் சிறந்த வழக்கறிஞராக இருக்கின்றார்.

நமது கீழை நியூஸ் இணைய தள பக்கத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “கீழக்கரை பொதுமக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட எந்த தேவைகள் இருப்பின் என்னை நேரில் அணுகி தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். நான் பொதுமக்களின் நியாயமான, உண்மையான மனுக்களை பரிசினை செய்து சான்று வழங்க பரிந்துரை செய்வேன்.என்னிடம் சான்றிதழ் பெற பொதுமக்கள் யாரையும் அணுக வேண்டாம். பொதுமக்கள் வேலை நேரத்தில் என் அலைபேசியில் தொடர்ப்பு கொண்டு நேரில் என் அலுவலகத்திற்கு வந்து வருவாய் சம்பந்தப்பட்ட மனு மீது தீர்வு காணலாம் பொதுமக்களுக்கு உதவ காத்து இருக்கின்றேன். பொது மக்கள் சேவையே என் முதல் பணியாகும்” என்றார். வருவாய் ஆய்வாளர் அவர்களின் அலை பேசி எண்:-9944871665.

இவர் பணி சிறக்கவும், அவருடைய பணி கீழக்கரை மக்களுக்கு பயனுள்ளதாக அமையவும் கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!