17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 4, 2019, 6:27 pm

பெரம்பலூரில் ஜூன் 29 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு முடிவின்படிபிரதமரின் கிஸான் சமான் திட்ட பணிக்கான கால அவகாசம், நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் காலிப் பணியிடங்களை வெளி முகமை மூலம் நியமனத்தை கைவிட வேண்டும்.டாஸ்மாக் மேலாளர் பணி நியமனத்தை துணை ஆட்சியர் நிலையில் வருவாய்த்துறை மூலம் தொடர வேண்டும்.ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியமர்த்தும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலர் காசிநாத துரை, ராமநாதபுரம் வட்ட பொருளாளர் சிவக்குமார், வட்ட கிளை துணைத் தலைவர் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!