18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் பாலியல் புகாரில் கைது.

மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் பாலியல் புகாரில் கைது.

எழுதியவர்: mohan July 4, 2019, 3:00 pm

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலின் முன்னாள் இணை ஆணையரும் தற்போது திண்டுக்கல் இந்து சமய அறநிலைய துறையில் அதிகாரியாக பணிபுரிபவருமான அனிதா மதுரை சரக காவல் துறை தலைவரிடம் பச்சையப்பன் மீது அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பச்சையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பேரையூர் காவல் ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் போலிசார் பேரையூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலின் சிலை மாயமானது தொடர்பாக இந்து அறநிலைத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியாளர் சங்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!