18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டி படுகொலை

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டி படுகொலை

எழுதியவர்: mohan July 3, 2019, 7:01 pm

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டி படுகொலை செய்து உடலை கண்மாயில் வீச்சு . உடலை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய கொலையாளிகளுக்கு போலீஸார் வலை வீச்சு . விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன்  மகன் செந்தில்குமார்  மனைவி லட்சுமி இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் நேற்று காலை தனது மனைவிடம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றவர் காலை வரை வீடு திரும்பவில்லை. சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் மனைவி லட்சுமி தனது கணவர் காண வில்லை என்று புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் சிவகாசி அருகே திருத்தங்கலிலுள்ள செங்கமலப் பட்டி பஞ்சாய்த்துக்குட்பட்ட உறிஞ்சி குளம் கண்மாயில் 30 வயது மதிக்க தக்க ஒரு ஆண் சடலம் வெட்டு காயங்களுடன் கிடைப்பதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்க்கு தகவல் வந்துள்ளன  சம்பவ இடத்திற்க்கு சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் ஆய்வு மேற்க்கொண்டதில்  கொலை செய்யப்பட்டவர் செந்தில்குமார தான் என்று போலீஸார் உறிதி செய்தனர் மேலும் செந்தில்குமார் எக்காரணத்திற்க்கு கொலை செய்தனர் என்றும் முன்பகை காரணமா? அல்லது தவறான முறையில் பெண் விஷயமா ? என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு சிவகாசி கிழக்கு போலீஸார் வலைவீச்சு தேடிவருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!