17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டு- தடுப்பணைகள் கட்ட வேண்டும் விவசாயிகள் அமைப்பு கோரிக்கை

வத்தலக்குண்டு- தடுப்பணைகள் கட்ட வேண்டும் விவசாயிகள் அமைப்பு கோரிக்கை

எழுதியவர்: mohan July 3, 2019, 6:01 pm

மணல் திருட்டை தடுக்கவும்,  கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல்இருக்கவும்  தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் அமைப்புகோரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்புகூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர்ஏ.எம்.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் பழனிக்குமார், மாநிலபொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சென்னை உள்பட தமி்ழ்நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.  தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்திடவும், மணல்திருட்டை தடுக்கவும் ஆறுகளில் ஆங்காங்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.  ஒருநாடு, ஒரு கார்டு என்ற மத்திய அரசு திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரத்தில் மத்திய அரசு இந்திய எல்லையில் அன்டை நாட்டினர் எல்லை மீறும்போது எப்படி உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்கிறார்களோ  அது போல இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்சனைகளிலும் அதே போல உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பொருளாளர் தங்கப்பாண்டிநன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!