திண்டுக்கல்மாவட்டம்வத்தலக்கு்ணடுஅருகே சின்னமநாயக்க ன்கோட்டையைச்சோ்ந்த மைனர் பெண் 16 நிலக்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். அதே மில்லில் நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைபட்டியைச்சோ்ந்த ஜோதிராஜன் மகன் வரதராஜன் 24 வேலை பார்த்து வந்துள்ளார்.அங்கு இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 28ம் தேதி வேலைக்குசென்ற பெண் வீடு திரும்பவில்லை. அவரை பல இ்டங்களில் தேடியும்கிடைக்காததால் அவரது தாய் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார்செய்தார். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வழக்கு பதிவு
செய்து விசாரணை செய்த போது வரதராஜன் மைனர் பெண்ணை கடத்திச் சென்றதுதெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவ்வழக்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேன்மொழி வரதராஜனைகைது செய்தார். போலீசார் அவரிடம் இருந்த மைனர் பெண்ணை மீட்டு தாயரிடம் ஒப்படைத்தனர்.
நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் கைது
எழுதியவர்: mohan July 3, 2019, 5:37 pm




You must be logged in to post a comment.