18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை-ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதியில்லாத வாகன காப்பகம்.கட்டணம் வசூலிப்பதிலும் குளறுபடி.

மதுரை-ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதியில்லாத வாகன காப்பகம்.கட்டணம் வசூலிப்பதிலும் குளறுபடி.

எழுதியவர்: mohan July 3, 2019, 5:22 pm

மதுரை மதுரை மாவட்டம் மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு வகையான வாகன காப்பகம் கட்டண வசூல் செய்கிறார்கள் ஒப்பந்ததாரர் ஒரே பெயர்தான் போட்டுள்ளது

ஒரு இடத்தில் சைக்கிளுக்கு 12 மணிநேரத்துக்கு 10 ரூபாய் எனவும் இருசக்கர வாகனத்திற்கு 12 மணி நேரத்துக்கு 20 ரூபாயும் 24 மணி நேரத்திற்கு 40 ரூபாயும் என பிரீமியம் என அதில் எழுதப்பட்டுள்ளது அதில் என்ன பிரீமியம் என பொதுமக்களுக்குப்புாியவில்லைஃஇது குறித்து கேள்வி எழுப்பினாலும் பதிலில்லை.மேலும் அங்கிருந்து சுமார் 20 அடி தூரம் உள்ள மற்றொரு இடத்தில் சைக்கிளுக்கு ஐந்து ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு பத்து ரூபாயும் 12 மணி நேரத்திற்கு வசூல் செய்கிறார்கள்.ஒப்பந்ததாரர் இரண்டு இடங்களுக்குமே ஒருவரே என்ற கட்டணம் மாறுபடுகிறது.மேலும் வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்திற்கு வெயிலிலும் மழையிலும் நனைந்து காய்கிறது இதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் பெயருக்கு காப்பகம் என செயல்பட்டு வருகிறது.உடனடியாக இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பயணிகளின் வேண்டுகோளாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!