17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் 24 மணி நேரமும் தண்ணீர் திருட்டு. கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் 24 மணி நேரமும் தண்ணீர் திருட்டு. கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

எழுதியவர்: mohan July 3, 2019, 3:31 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வைகை ஆற்றில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் நிலக்கோட்டை பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன நீரேற்று இயக்குனர்களின் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு நிர்வாகம் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த உறை கிணற்றை தற்போது தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அங்குள்ள தோட்டத்தின் இணைப்பிலிருந்து மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை எடுத்து அவர்கள் கட்டியுள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்பி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ – 10 வீதம் விற்பனை செய்து வருகின்றனர் மேலும் டிராக்டர் மூலம் நிலக்கோட்டை பகுதிகளில் ஒரு குடம் ரூபாய் 20 க்கு விற்பனை செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் இந்த தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது வைகை ஆற்றில் தேனி பகுதியில் உள்ள வைகை அணையிலிருந்து மழை பெய்தால் மட்டுமே அங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் இந்த தண்ணீரானது தேனி வழியாக அணைப்பட்டி மட்டப்பாறை வழியாக மதுரை செல்கிறது ஆனால் தற்போது இந்த வைகை ஆற்றில் தண்ணீர் வரவில்லை இப்படி இருக்கும் நிலையில் ஒரு கிணற்றின் மூலம் அரசு தண்ணீரை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கொடுத்து வருகிறது இதுபோன்ற தனி நபர்கள் தண்ணீர் திருடினால் மிகவும் வறட்சியான சூழ்நிலை ஏற்படும் அவலம் உள்ளது.இவர்கள் மீது எந்த ஒரு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது கிடையாது.தண்ணீர் திருடுபவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!