17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தலைமை காவலர் மகனுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை- துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தலைமை காவலர் மகனுக்கு காவல் ஆணையர் பாராட்டு

எழுதியவர்: mohan July 3, 2019, 3:06 pm

மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்துவரும் பாலசுப்ரமணியன் ஸ்ரீமன் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் ஐந்து வருடங்களாக மதுரை ரைபிள் கிளப்பில் சேர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வந்தார். கடந்த 25.06.2019 முதல் 28.06.2019 வரை டெல்லியில் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக அளவில் 19 மாணவர்கள் பங்கேற்றனர் இதில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் பிரிவில் ஸ்ரீமன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் அடுத்த மாதம் அரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு ஸ்ரீமன் தேர்வாகியுள்ளார். இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் ஸ்ரீமனை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!