18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

எழுதியவர்: mohan July 3, 2019, 11:55 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் இல்லாமல் சிரம்மப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து எழுமலை பேரூராட்சி அதிகாரிகளிடம் குடிநீருக்காக ஆழ்துளை கின்று அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீல்நாயக்கன்பட்டி கிராம மக்கள் காலிகுடங்களுடன் உசிலம்பட்டி எழுமலை சாலையில் சாலைமறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்த எழுமலை போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!