திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள முத்துலிங்க புரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் சங்கர் பாண்டி 29. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது பெரியப்பா மகள் சங்குபதிக்கும் சங்கு பதியின் கணவர் மன்னார்குடியைச் சேர்ந்த கண்ணனுக்கும் கருத்து வேறுபாடு தற்போது பிரிந்து உள்ளார்கள். இந்நிலையில் சங்கு பதியை கண்ணன் சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சங்குபதியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் முத்துலிங்க புரத்தைச் சேர்ந்த தங்கம் மகன் தினேஷ 25, அவரது தந்தை தங்கம், நண்பர்கள் பிரவீன் குமார் சந்தனம் ஆகிய 4 பேர்களும் சேர்ந்து கண்ணனுக்கு ஆதரவாக பேசி உள்ளார்கள். இதனால் சங்கர்பாண்டிக்கும் தினேஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சங்கர் பாண்டியை தினேஷ் , பிரவீன் குமார்,சந்தானம் ,தங்கம் ஆகிய 4 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சங்கரபாண்டி கொடுத்த புகாரின் படி தினேஷ் பிரவீன் குமார் சந்தனம் தங்கம் ஆகிய நான்கு பேர்கள் மீது விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து சந்தானத்தை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தார். மேலும் மூன்று பேர்களை வலைவீசித் தேடி வருகிறார்..
விளாம்பட்டியில் கூலித் தொழிலாளி மீது தாக்குதல். ஒருவர் கைது ..
எழுதியவர்: mohan July 3, 2019, 11:48 am




You must be logged in to post a comment.