பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச கல்வி கிடைக்க வழி செய்வதோடு மாணவர்களுக்கான இலவச சீருடை, காலணி, புத்தக பை, நிதியளிப்பு என பல்வேறு கல்வி கற்பதற்கான இலவச திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
புதிய கல்வி ஆண்டானது ஜூன் மாதம் தொடங்கி கல்வி நிலையங்கள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.தமிழக அரசின் மூலம் இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான பாட நூல்களின் எண்ணிக்கை மற்றும் துணைப்பாட ஏடுகள் என அதிக அளவில் உள்ளதோடு அதன் எடையளவுகளும் அதிகப்படியாக உள்ளது.பள்ளி மாணவர்களின் உடல் எடைக்கு மீறிய சுமையாக தற்போது அவர்களின் பாடப்புத்தகங்கள் உள்ளன.இதனால் மாணவர்கள் பல்வேறு உடல் வலிக்கு உள்ளாகின்றனர்.மேலும் மாணவர்களின் பாடப்புத்தகங்கள் அதிக எடையில் இருப்பதை கொண்டே பெற்றோர்கள் தனியார் வாகன வசதிகளை நாடுகிறார்கள்.இதனால் அவர்களின் குடும்ப பொருளாதார வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.எனவே பெற்றோர்களின் பொருளாதார இழப்பு மற்றும் பள்ளி மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், கல்விதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உரிய கவனத்தில் கொண்டு பள்ளி மாணவர்களின் பாடப்புத்தக சுமை/எடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




You must be logged in to post a comment.