17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது

எழுதியவர்: mohan July 3, 2019, 11:03 am

தேனி மாவட்டம் தெற்கு ஜெகநாதபுரம் பழனிசெட்டிபட்டியில் உள்ள வீரநாகம்மாள் கோவில் முன்பு கடந்த 15 நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பல முறை சரிசெய்ய வேண்டும் என மனுஅளித்து வந்தும் இதுவரை சரிசெய்யாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்காக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அடிக்கடி அனுமதி இல்லாத மினிபேருந்துகள் இந்த வழித்தடத்தில் செல்வதாலும், பாதாள சாக்கடைக்காக தோண்டியபோது ஏற்பட்ட பள்ளத்தாலும் இந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகின்றது என்றனர்.

ஆனால் அதிகாரிகள் சரிசெய்ய உத்தரவிட்டாலும் கிளார்க் போன்றோர் உடைப்பை சரிசெய்ய லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது குடிநீர் பஞ்சம் தமிழகம் முழுவதும் தலைவிரித்திடும் சூழ்நிலையில் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!