தேனி மாவட்டம் பெரியகுளம் உபகோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஊழல் போக்கால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள ஆளும் கட்சி செல்வந்தருக்கு வேண்டப்பட்ட பினாமிகளுக்காகவே புதுப்புது திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை செயல்படுத்தியும் கமிஷன் அடிப்படையில் ஆதாயம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கான்ட்ராக்டர் மற்றும் தேனி பகுதியில் உள்ள கான்ட்ராக்டர் ஆகியோருக்கேபெரும்பாலான பணிகள் டெண்டர் விடப்படுவதுண்டு. இவர்களும் பணி என்ற போர்வையில் ஊழல் செய்வதுண்டு. லட்சுமிபுரம் அருகே பெரியகுளம் -தேனி தேசிய நெடுஞ்சாலையில் நன்றாக இருந்த சாலையை அகற்றி கழிவு நீர் வாய்க்கால், தரைப்பாலம் அமைத்து ( மழை நீர் வடிகால் வாய்க்கால்) பல லட்சம் ரூபாய்க்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலங்கள் பல சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் நன்றாக உள்ள சாலைகளை பெயர்த்து ஆங்காங்கே சிறு சிறு
பணிகளை மேற்கொண்டு கமிஷன் பெற்று , போலி கணக்குகள் ஏற்படுத்துவதுண்டு. அரசியல்வாதிகளுக்கே தெரியாத திட்டங்களை, அதிகாரிகள் “இவற்றை செய்தால் இவ்வளவு லாபம் பெறலாம் என்று எடுத்துரைத்து திட்டங்களை தீட்டி ஆதாயம் பெறுவதுண்டு . அரசியல் பிரமுகர்களை கைக்குள் வைத்துக் கொண்டு அதிகாரிகள் திட்டங்கள் என்று மக்களுக்கு தேவைப்படாத ஒன்றை தேவையானதாகக் கொண்டு செயல்படுத்தி மக்களது வரிப் பணத்தை வீணடித்து வருகின்றனர். சமீபத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட தரைப்பாலங்களை மீண்டும் தோண்டி புதிதாக தரைப்பாலம் அமைத்து வருகின்றனர். பெரியகுளம் கைலாசபட்டி அருகே கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் வழி அருகே ஏற்கனவே போட்ட தரைப்பாலத்தை அகற்றி புதிதாக தரைப்பாலம் அமைத்து வருகின்றனர். தரைப்பாலத்தின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் தானோ? லட்சுமிபுரம் பகுதியில் ஒரு தரைப்பாலம் மழை நீர் வடிகால்வாய் என்ற பெயரில் புதிது புதிதாய் கணக்கு காட்டுவது, தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வேகத்தடை, பெரியகுளம் – வைகை அணை ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சிக்னல் அப்புறப்படுத்தப்பட்டு பல மாத காலம் ஆகியும் இன்னும் இப்பகுதியில் சிக்னல்
அமைத்துத் தரப்படவில்லை, சாலை ஓரங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட மூடிய நிலையில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால் பல இடங்களில் உடைந்தும், பெயர்ந்தும் காணப்படுகின்றது. பெரியகுளம் மூன்றாந் தல் பகுதியில் உள்ள காந்தி சிலை அமைந்துள்ள தடுப்பின் மீது கனரக வாகனங்கள் மோதி அடிக்கடி சேதமடைந்து வருகின்றது. அவற்றை சரி செய்யக் கூட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொள்வது கிடையாது, அதே போல் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட தடுப்பும் சேதமடைந்து இன்று வரை பராமரிப்பின்றி காணப்படுகின்றது. பெரியகுளம் நகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலையில், பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்வதாக கூறி நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியில்லாமல் பள்ளம் தோண்டி வருகின்றனர். இவற்றை கண்டு கொள்வதில்லை. இதனால் வாகன ஓட்டிகள்
மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் இப்பகுதியில் உள்ள சாலைகள் ஓராண்டுக்குள் சிதிலமடைகின்றது.பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் காண்ட்ராக்டர்களுக்கு மட்டுமே ,பணி வழங்கப்படுவதால் கமிஷன் பெறும் அதிகாரிகள் எதையும் கண்டு கொள்வதில்லை.என்று.சமுக ஆர்வலகள்கூறுகிறாகள். இனியாவது.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்கள. பொறுத்திருந்து. பார்போம்.
.சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்







You must be logged in to post a comment.