ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மோகன், 47. ஜூன் 2ஆம் தேதி மதியம் குளிக்கச் சென்று விட்டு வீடு திரும்பியபோது கண்மாயில் சவடு மண் அள்ளுவதை மோகன் உள்பட 6 பேர் தட்டிக்கேட்டனர். இது தொடர்பான தகராறில் மோகன் கொல்லப்பட்டார். மோகனின் மைத்துனர் பத்மநாதன் புகாரில் ஜெய் பாரத், ஆனந்த், கார்த்தி, ஹரீஷ், முனியசாமி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் ராமநாதபுரம் மரப்பாலம் கருப்பையா மகன் ஆனந்த் ராஜ் 33, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஜூன் முதல் வாரம் சரணடைந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் வண்டி க்காரத் தெரு ராஜேந்திரன் மகன் ஹரீஷ் பாபு 23, உச்சிப்புளி என்மனங்கொண்டான் காந்திநகர் கருங்கு மகன் முனியசாமி 32 ஆகியோர் ஜூன் 7ல் கமுதி நீதிமன்றத்திலும், ராமநாதபுரம்எம்எஸ்கே நகர் ராமர் மகன்ஜெயபாரத் 32, சண்முகவேலு மகன் அருண்குமார் 29, ராமநாதபுரம்அண்ணா நகர் குட்ஷெட் தெரு கார்மேகம் மகன் கார்த்திக் 29ஆகியோர் பரமக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜூன் 12ஆம் தேதி சரணடைந்தனர். மோகன் கொலையில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இளமனூர் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெய்பாரத், கார்த்திக், ஹரீஷ்பாபு, ஆனந்தராஜ், அருண்குமார் ஆகிய ஐந்து பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.
* ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த நாகநாதன், 32. மே 22ல் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய எம் எஸ் கே நகர் முனியசாமி மகன் ராஜ்குமார் 26 என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.




You must be logged in to post a comment.