17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கன்னிவாடி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

கன்னிவாடி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

எழுதியவர்: mohan July 3, 2019, 9:48 am

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சுரைக்காய்பட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் (19) மற்றும் மனோஜ் குமார் (28) ஆகிய இருவரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ரஞ்சித் குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!