தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம் மற்றும் கல்வி கடன் ஆகிய திட்டங்கள் கீழ் 2019-2020-ஆம் நிதியாண்டிற்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை,இராமநாதபுரம் மாவட்டத்தில் 10.7.2019 அன்று சித்தார்கோட்டை ,11.7.2019 அன்று பனைக்குளம்,12.07.2019 அன்று தொண்டி, 15.7.2019 அன்று ஆர்.எஸ்.மங்கலம், 16.7.2019 அன்று கீழக்கரை,17.7.2019 அன்று உச்சிப்புளி, 18.7.2019 அன்று கமுதி ஊர்களின் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் டாம்கோ கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் (கிறிஸ்தவர்,இஸ்லாமியர்) டாம்கோ லோன் மேளாவில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடன் மனுக்களுடன் சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல்,குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில் குறித்த விவரமம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடன் விண்ணப்பிப்பவர்கள் பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து சிறுபான்மையினர் கடன் உதவி பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்




You must be logged in to post a comment.