17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காற்றின் வேகம் அதிகரிப்பு. தனுஷ்கோடி கடலில் ராட்சத அலைகள்

காற்றின் வேகம் அதிகரிப்பு. தனுஷ்கோடி கடலில் ராட்சத அலைகள்

எழுதியவர்: mohan July 2, 2019, 5:52 pm

ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லையை உள்ளடக்கிய மன்னார் வளைகுடாவில் நேற்று இரவு முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்தது. இன்று  அதிகாலை காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. இதனால் கடலில் அலைகள் அதிக உயரத்திற்கு எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.தனுஷ்கோடி கடலில் 20 முதல் 30 அடி வரை ராட்சத அலை எழுந்தன. கடல் சீற்றத்தால் பாம்பன், மண்டபம் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.மேலும் பலத்த சூறைக்காற்று வீசுவதால் சாலை மணல் மூடியது.தனுஷ்கோடி நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தப்பட்டது. . தடை விதிப்பால் பாம்பன், மண்டபம் கடல் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!