17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தாலுகாவில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம்

நிலக்கோட்டை தாலுகாவில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம்

எழுதியவர்: mohan July 1, 2019, 4:20 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டையில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் , சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி முத்தையா வரவேற்று பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள 40 ஊராட்சிகளிலும் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள நிர்வாகிகளும் புதிய உறுப்பினர்களும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு மாதத்திற்கு 300 சேர்க்க வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. . நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மாணவர்களுக்கு தனியாக அரசு ஆண்கள் கலைக்கல்லூரி இதுவரை அரசு ஏற்படுத்தவில்லை. எனவே வருகின்ற காலங்களில் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக அரசு ஆண்கள் கலைக்கல்லூரி ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சதீஷ்குமார் , பாபு, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!