18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜி யாக பிரவீன்குமார் அபினபு பொறுப்பேற்பு…

திருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜி யாக பிரவீன்குமார் அபினபு பொறுப்பேற்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 30, 2019, 9:41 pm

திருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜியாக பிரவீன்குமார் அபினபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக டி.ஐ.ஜியாக இருந்த கபில்குமார் சாரட்கர் சென்னைக்கு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் சென்னையில் சி.பி.சி.ஐ.டி மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பிரவீன்குமார் அபினபு பதவி உயர்வு பெற்று தற்போது திருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (30/06/2019) அலுவலகத்திற்கு சென்ற அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு டி.ஐ.ஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரவீன்குமார் அபினபு மக்கள் காவல் துறையை நண்பராக பார்க்க வேண்டும்.காவல் துறை எடுக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதோடு, பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில் நன்கு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!