18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் உலக சாதனையில் இடம்பெற்ற தேனி சிறுவன்!

வில் மெடல்ஸ் உலக சாதனையில் இடம்பெற்ற தேனி சிறுவன்!

எழுதியவர்: ஆசிரியர் June 30, 2019, 10:00 am

தேனி மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்த 1 வயது 7 மாதம் ஆன சிறுவன் முகமது நதீம். 28/6/2019 அன்று தேனியில் K.K.S மஹாலில் இச்சிறுவனின் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. 1 நிமிடத்தில் 30 நாடுகளின் தேசக்கொடிகளை அடையாளம் காட்டிய சிறுவன் முகமது நதீமிற்கு வில் மெடல்ஸ் உலக சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.  கருத்த ராவுத்தர், ஹௌதியா கல்லூரி கமிட்டி உறுப்பினர் மீரான் தலைமை வகித்தார். வில் மெடல்ஸ் உலக சாதனை நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி, முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு, ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறுவனுக்கு சாதனைச் சான்றிதழை வழங்கினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை பேரா.ஃபய்ஸல் அகமது செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!