17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan June 29, 2019, 6:10 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது.                       சிறப்பு கிராம சபை கூட்டம் தொழிலாளர்களின் நலவாரியங்களில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தல் கிராமசபை கூட்டத்தில் பேசப்பட்டது.            நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் பஞ்சாயத்து அலுவலகம முன்பு கிராமசபை கூட்டம் பாண்டியராஜன் தலைமையில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கழிப்பறை மற்றும் பொது சுகாதாரம் குறித்து பேசப்பட்டது. அப்போது திரண்டிருந்த மக்கள் கோட்டூர் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தக்க நடவடிக்கை இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், ஊராட்சி ஆணையாளர் லாரன்ஸ் ஆகியோர்கள் வாக்குறுதி அளித்தனர். இதேபோல் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டம் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் வைகை ஆறு மிக அருகில் இருந்தோம் இதுவரை தண்ணீர் முழுமையாக கிடைக்க பாடவில்லை எனவே கிராமப்புற மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.. உரிய தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதேபோல் கோடாங்கி நாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது..           கூட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் தனிநபர் கழிப்பறை குறித்து வாதங்கள் எழுதப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் தரப்பில் அனைத்து கிராமங்களுக்கும் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.   இதே போன்று அனைத்து கிராம கூட்டத்தில் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முக்கியமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தார்கள்..        இந்த கிராம சபை கூட்டத்தை நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!