17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

எழுதியவர்: mohan June 29, 2019, 5:17 pm

சென்னையிலிருந்து புறப்படும் நெல்லை மற்றும் குருவாயூர் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரைபிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில் ஜூலை 1-ஆம் தேதி முதல் காலை 8.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி காலை 8.25 மணிக்கு புறப்படும்.அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.50 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் இரவு 10.55 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று 43 ரயில்களின் நேரம் மாற்றப்ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!