18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே லாரி மோதி கூலித் தொழிலாளி பலி

நிலக்கோட்டை அருகே லாரி மோதி கூலித் தொழிலாளி பலி

எழுதியவர்: mohan June 29, 2019, 10:33 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஜார்ஜ் புரத்தைச் சேர்ந்த செல்வகுமார் . இவர் நிலக்கோட்டை உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கவுதம் இவர் வட மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி படித்து வருகிறார்.. இருவரும் நேற்று மதுரைக்கு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் நிலக்கோட்டையில் இருந்து மதுரையை நோக்கி பள்ளப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. இதில் செல்வகுமார் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் பலத்த காயமடைந்த கௌதம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.. லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!