17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் – மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் அதிரடி

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் – மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் அதிரடி

எழுதியவர்: mohan June 29, 2019, 10:26 am

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சிறு சிறு கடைகள் இருந்தன. காவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற (குழாய் அமைக்க ) தடையாக இருந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன், நெடுஞ்சாலை துறை, குடிநீர் வடிகால் துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதியை இடித்து தள்ளினர்.காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக காட்பாடி பஸ் நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!