திருமங்கலம் அருகே இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் , பல்வேறு முறைகேடுகள் நடந்ததை எதிர்த்து கேட்டு கிராம மக்களுக்கு அடி உதை – கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகை .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேல உப்பிலிக்குண்டு கிராமத்தில் இன்று காலை கிராம சபை கூட்டம் , உரிய இடத்தில் நடத்தாமல் கண்மாயில் வேலை பார்க்கும் மக்களை அழைத்து கிராம ஊராட்சி செயலாளர் சக்திவேல் கிராம சபை கூட்டத்தை கூட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த கிராமத்தினர், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியாத வர்களுடைய பெயர்களை வைத்து லட்சக் கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதையும் , கிராமத்தில் நூலகமே இல்லாத நிலையில் நூலகத்திற்காக செலவு கணக்கு எழுதியதை கண்டித்தும் , இதுபோன்ற பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது பற்றி கேட்டவர்கள் மீது கிராம உதவியாளர் சக்திவேலின் சகோதரர் மாயாண்டி மற்றும் அவருடைய சகோதரிகள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் இதனை கண்டித்து கிராம உதவியாளர் சக்திவேலை மாற்றக் கோரியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள கூடக் கோவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
செய்தியாளர் சங்கர்



You must be logged in to post a comment.