17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரம்பலூர் – விவசாய நிலங்களுக்குள் சாய்ந்து உடைந்து கிடக்கும் மின்கம்பத்தால் விவசாயிகள் அவதி

பெரம்பலூர் – விவசாய நிலங்களுக்குள் சாய்ந்து உடைந்து கிடக்கும் மின்கம்பத்தால் விவசாயிகள் அவதி

எழுதியவர்: mohan June 28, 2019, 4:45 pm

பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெண்மணி கிராமத்தில் இருந்து மேலும் மதுரை செல்லும் சாலையில் வயல்வெளியில் மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்து கிடக்கின்றன .

அப்புறப்படுத்தாமல் காலதாமதபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஒரு மின் ஒயர் தாழ்வான பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.ஒரு மூங்கில் குச்சியை கொண்டு முட்டுக் கொடுத்து உள்ளார்கள் . இந்த வழியாகத்தான் மினி பேருந்துகள் சென்று கொண்டிருக்கின்றன . பெரிய வெண்மணி குன்னம் எல்லையிலிருந்து சின்ன வெண்மணி மேலமாத்தூர் செல்லும் பாதை வரை காட்டுப் பகுதிகளில் இந்த மின்பாதை செல்கின்றன .இவற்றுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தான் உள்ளது . ஆனால் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் மின் வயர்கள் அறுந்த நிலையில் விவசாய நிலத்தில் கிடப்பதாலும் , மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்து கிடைப்பதாலும் விவசாயிகள் ஏர் ஓட்டுவதில் , விதைப்பதில் , பயிர்கள் சாகுபடி செய்வதில் மிகப் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்

பலமுறை புகார் அளிக்கப்பட்டும் புகார்களை கண்டுகொள்வதில்லை இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.மின்சாரம் இல்லாததால் அவற்றை அப்புறப்படுத்துவதில் காலதாமத படுத்துவதாக இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர். இதனால் ஏற்படும் இழப்புக்கு மின்சாரத்துறை இழப்பீடு வழங்குமா ? என விவசாயிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் பயனற்ற மின்கம்பங்களை முறையாக அப்புறப்படுத்துமாறு மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் மின்வாரியத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!