18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையிலிருந்து ஒரு நீதிபதி…. வாழ்த்துவோம்…

கீழக்கரையிலிருந்து ஒரு நீதிபதி…. வாழ்த்துவோம்…

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2019, 4:23 pm

நம் சமுதாயத்தில் உயர்ந்த பதவி மட்டுமல்லாமல் மதிப்புகுரிய பதவிகளில் ஒன்று நீதிபதி பதவியாகும். இந்த உயர் பதவியை குறைந்த வயதான 33 வயதிலேயே எட்டிபிடித்துள்ளார் கீழக்கரையை சார்ந்த  நாகேந்திரன் என்பவரின் மகன் சிவபழனி சிவில் கோர்ட் நீதிபதி ஆகியுள்ளார்.

இம்முறை  மத்திய அரசு நடத்திய தேர்வில் தமிழகத்தில் 213 பேரில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நபர்கள் மட்டும் தேர்வாகினர். இதில் இராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் கீழக்கரையை சேர்ந்த சிவபழனியும் ஒருவர் ஆவார்.  இவரது தந்தை நாகேந்திரன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் எதிரே இளநீர் வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் வயதில் மதிப்புமிக்க  பெரிய பதவியை தன் முயற்சியால் எட்டிய மனிதரை நாமும்  மனதார வாழ்த்துவோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!