திருமங்கலம் பி கே என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுபப்புபடிக்கும் மாணவிகளுக்கு மடிக்கணினி தராததால் தேர்வை புறக்கணித்து மறியல் போராட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி கே என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மடி க்கணினி இல்லை என்பதால் இன்று நடை பெற இருந்த தேர்வை புறக்கணித்து விட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அரசு உதவிபெறும் பள்ளியில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதாகவும் அதற்குரிய ரசீது கொடுப் பதில்லை எனவும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர் மேலும் இது தொடர்பாகவும் புகார் கொடுத்தால் பள்ளியை விட்டு நீக்கி விடுவோம் என மிரட்டு வதாகவும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர் மறியல் போராட்டம் தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கல்வித்துறை உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் வசூலித்த பணத்திற்கு ரசீது தரவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர் இன்று தேர்வு எழுதுவதை புறக்கணித்து விட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சங்கர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.