17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது

நிலக்கோட்டையில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது

எழுதியவர்: mohan June 28, 2019, 12:45 pm

நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள விநாயகன் பட்டியை சேர்ந்த ரகுநாதன் கடையில் மர்ம நபர்கள் 25 செல்போன்கள் மற்றும் மெமரி கார்டுகள் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர்.      இதுகுறித்து  ரகுநாதன் கொடுத்த புகாரின் படி நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் உத்தரவுப்படி நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செல்போன்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.        இந்நிலையில் செல்போன் ஐ எம் ஐ செல் நம்பரை வைத்து அதன் எந்தப் பகுதியில் இருக்கிறது என போலீசார்கள் கண்டுபிடித்தனர.              அதனைத் தொடர்ந்து அந்த செல்போன்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொடைக்கானல் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருப்பதாக தெரியவந்தது.                                          உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.       விசாரணையில் கொடைக்கானலை சேர்ந்த பால் தினகரன் என்பவர் செல்போன் விட்டதாகவும் . திருடியதாகவும் தெரியவந்தது.     இதனை த்தொடர்ந்து பால் தினகரன் செல் நம்பரை வைத்து தேடியபோது பஸ் நிலையத்தில் இருந்தது தெரிய வந்தது உடனே. போலீசார் சுற்றிவளைத்து பால் தினகரனை கைது செய்தனர்.       இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார்,, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராசு,, மற்றும் போலீசார்கள் பாலமுருகன்,  செந்தில் குமார் ஆகியோர்கள் நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட்  மும்தாஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பால் தினகரனை திண்டுக்கல் சிறைச்சாலையில் அடைத்தனர். தினகரன் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!