17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி – திமுக மாணவரணி சார்பில் புதிய கல்வி கொள்கை வரைவு திட்ட நகல் எரிப்பு போராட்டம்

தூத்துக்குடி – திமுக மாணவரணி சார்பில் புதிய கல்வி கொள்கை வரைவு திட்ட நகல் எரிப்பு போராட்டம்

எழுதியவர்: mohan June 28, 2019, 12:36 pm

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் புதிய கல்வி கொள்கை வரைவு திட்ட நகல் எரிப்பு போராட்டம்

மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு செய்வதற்கான குழு, இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தை பரிந்துரை செய்து, மத்திய அரசிடம் வழங்கியது.அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படும் என்ற செய்தி பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர்கள் அந்த அறிக்கையை, பலரையும் கலந்து ஆலோசித்த பிறகுதான், செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதுஇதனை எதிர்த்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் புதிய தேசிய கல்வி முறையை கண்டித்து அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை எதிர்த்து மாநில மாணவர் அணி துணை செயலாளர் M.A.M ஷரிப் தலைமையில் VVD சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் வரைவு திட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் S.R.ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகர அமைப்பாளர் K. சுரேஷ் குமார், மாநகர துணை அமைப்பாளர் M.பால் மாரி ,T.சோம நாதன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் T.முத்து துரை, A.பாலகுருசாமி, A.J. சங்கர், K. தாமோதர கண்ணன், G.செல்வ மணிகண்டன், வக்கீல் J.ரூபராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!