18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக கோப்பை வெல்ல ராமநாதபுரத்தில் வாழ்த்து மடல்

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக கோப்பை வெல்ல ராமநாதபுரத்தில் வாழ்த்து மடல்

எழுதியவர்: mohan June 28, 2019, 10:59 am

ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரி சார்பில் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு சர்க்கரை மற்றும் முட்டையால் செய்த 2019 உலகக்கோப்பை வாடிக்கை யாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 60 கிலோ சர்க்கரை, 300 முட்டை கொண்டு ஆறு கேக் வடிவமைப்பாளர்கள் நான்கு நாளில் உருவாக்கி உள்ளனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டி (14.7.2019) வரை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு, ஐஸ்வர்யா பேக்கரி பாரதி நகர் கிளையில் வைக்கப்படுகிறது. இதனை வடிவமைத்த ஊழியர்களுக்கு ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் பி. வெங்கடசுப்பு பாராட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார். இது வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாதிரி உலகக் கோப்பை முன் நின்று கிரிக்கெட் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மகாகவி பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாரதியார் உருவ கேக் ஏற்கனவே வடிவமைத்து வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் கோதுமை மாவால் தயாரித்த கரண்டி செய்து வாடிக்கையாளர்களின் பாராட்டை ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரிச் தற்போது வரை 5 போட்டிகளில் வென்று 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் பிடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி இறுதி ஆட்டத்தில் கோப்பை வென்று வாழ்த்து மடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!