18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செய்தியாளர் பிரசன்னா மரணம். “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” இரங்கல்

செய்தியாளர் பிரசன்னா மரணம். “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” இரங்கல்

எழுதியவர்: mohan June 28, 2019, 10:52 am

நியூஸ் ஜெ செய்தியாளர் பிரசன்னா மரணம், மற்றும் அவரது குடும்பத்தினர் மரணம் செய்தியறிந்து, “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” மிகுந்த மனவேதனை அடைந்துள்ளது, மேலும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.!

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, மற்றும் அவரது மனைவி, மற்றும் தாயார், நேற்று இரவு உறங்கி கொண்டிருந்த போது குளிர்சாதன பெட்டி வெடித்து உயிரிழந்த, செய்தியை தெரிந்து கொண்ட நொடி முதல் மனம் மிகவும் வேதனையாகவும், கஷ்டமாகவும் உள்ளது, மேலும் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் சுறுசுறுப்பாகவும் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் செய்தியாளர் பிரசன்னா, பிரசன்னாவை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் நண்பர்ககளுக்கு “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!