17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர்ப்பதற்குஎதிர்ப்பு.தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் .

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர்ப்பதற்குஎதிர்ப்பு.தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் .

எழுதியவர்: mohan June 27, 2019, 8:18 pm

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர்ப்பதற்கு தேனி மாவட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் தேனி மாவட்ட செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அக் கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கடுமையான விமர்சித்து ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்காக தங்க தமிழ்ச்செல்வன் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது இந்த கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஒன்றியச் செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் தங்கதமிழ்செல்வன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யையும் கடுமையாக விமர்சித்துள்ளார் எனவே அவரை மீண்டும் கட்சியில் இணைக்க கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வழங்க உள்ளனர். இதற்காக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் இன்று இரவு சென்னை செல்ல உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!