17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில்  வளர் இளம் தலைமுறைக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

நிலக்கோட்டையில்  வளர் இளம் தலைமுறைக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

எழுதியவர்: mohan June 27, 2019, 7:36 pm

இளம தலைமுறையினருக்கு பாரம்பரியம் மறந்து வரும் சூழலில்  பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக பாரம்பரிய விளையாட்டுபோட்டிகளானபல்லாங்குழி,நொண்டி,சொட்டாங்கல்,பம்பரம்,கிட்டிபில்லை,கோலிகுண்டு,போன்ற விளையாட்டுகள்  நிலகோட்டையில் நாடார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி  செயலர் கருமலைபாண்டியன்  தலைமை தாங்கினார். சைல்டு வாய்ஸ் நிர்வாக அறங்காவலர் அண்ணாதுரை  , திட்ட இயக்குனர் சார்லஸ் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர்.  இப்போட்டியில் நிலக்கோட்டை பகுதியில் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த வளரிளம் பெண்கள் மற்றும் வளரிளம் ஆண்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசினை   டாக்டர்.வனிதாமணி, வத்தலகுண்டு சங்க செயலாளர் மாதவன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.  இப்போட்டிக்கான ஏற்பாடுகளை திட்ட மேலாளர் ரம்யா , திட்ட ஒருங்கினைப்பளர்கள் பிரகாஷ், சிவநாக ஜோதி, ஜெனிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!