18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இராமநாதபுர தூய்மை பாரத இயக்கமும் இணைந்து நடத்திய சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இராமநாதபுர தூய்மை பாரத இயக்கமும் இணைந்து நடத்திய சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

எழுதியவர்: mohan June 27, 2019, 7:29 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இராமநாதபுர தூய்மை பாரத இயக்கமும் இணைந்து நடத்திய சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வு பெருங்குளம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை அரசினர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் நாதிரா பானு கமால் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் தூய்மையை வலியுறுத்தியும் ,’சுத்தம் சோறு போடும்’ என்றும் கூறி தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் 10 மாணவிகள் சுகாதார விழிப்புணர்வு பற்றி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். இராமநாதபுர மாவட்ட தூய்மை பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  நவநீதன் அவர்கள் தன் சுத்தத்தையும், திறந்த வெளி கழிப்பிடத்தால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். பெருங்குளம் பஞ்சாயத்து செயலாளர் முகம்மது அப்கருதீன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்வை கல்லூரியின் வெளிப்புற நிகழ்வு அலுவல ஒருங்கிணைப்பாளர் பாத்திமா,.விக்னேஸ்வரி ஒருங்கிணைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!