18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் குடிநீர் வறட்சி குறித்து அதிகாரிகள் ஆய்வு

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் குடிநீர் வறட்சி குறித்து அதிகாரிகள் ஆய்வு

எழுதியவர்: mohan June 27, 2019, 7:17 pm

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் குடிநீர் வறட்சி குறித்து அதிகாரிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து, ஆழ்துளை கிணறுகள் போன்றவைகளை சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதனைதொடர்ந்து குடிநீர் வழங்கும் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதில் மதுரை நகராட்சி மண்டல இயக்குநர் நடராஜன், உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் ( பொறுப்பு ) அழகேஸ்வரி, நகராட்சி சுகாதார துறை அதிகாரி அகம்மது கபீர், நகராட்சி அதிகாரிகள், செயற்பொறியாளர்கள பலர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!