18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் துவக்க நிகழ்ச்சி

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் துவக்க நிகழ்ச்சி

எழுதியவர்: mohan June 27, 2019, 7:12 pm

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் பல்வேறு மாவட்டத்திலிருந்து புதிய மாணவர்கள் பெற்றோர் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர்கள் அணைத்துத்துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர் பயிலக முதல்வர் பேராசிரியர் டாக்டர். அ. அலாவுதீன் அவர்கள் தலைமையேற்று கல்லூரியின் பல சிறப்பம்சங்களையும் வேலைவாய்ப்பு வசதிகளையும் எடுத்து கூறினார் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் ராமநாதபுரம் விரிவாக்க மையத்தின் இயக்குநர் மற்றும் பேராசிரியர் டாக்டர்.ஜீ.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு பொருளாதார முன்னேற்றத்தில் பொறியாளர்களின் பங்கு பற்றியும் மீன்வளத்துறையின் வேலைவாய்ப்பு பற்றி எடுத்துரைத்தார் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் கணினித்துறை தலைவர் பேராசிரியர். ஆர். மணிகன்டன் அவர்கள் தன்னம்பிக்கை விடாமுயற்சி பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். இ,ரஜபுதின் வாழ்த்துரை வழங்கினார் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அடிப்படை பொறியியல் துறைத்தலைவர் ஆர். யோசுவா மற்றும் எம்.உமையாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!