17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பத்திரிகையாளர் பிரசன்னா மரணம்.சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பத்திரிகையாளர் பிரசன்னா மரணம்.சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

எழுதியவர்: mohan June 27, 2019, 6:55 pm

பத்திரிகையாளர் பிரசன்னா மரணம் – வேதனையளிக்கிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் .

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா அவரது மனைவி மற்றும் தாயார் நேற்று (26-06-2019) இரவு உறங்கி கொண்டிருந்த போது குளிர்சாதன பெட்டி வெடித்து உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை இன்று காலையில் அறிந்த நொடியில் இருந்தே பத்திரிகையாளர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.பழகுவதற்கு இனி பத்திரிகையாளர் பிரசன்னாவின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. பிரசன்னாவை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறது .பிரசன்னா , தாயார், மனைவி உடல் குரோம்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அடையாறு எடுத்துச் செல்லப்படுகிறது.பிரசன்னாவின் தங்கை இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது.

நாளை (28-06-2019 )காலை பெசண்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு.

முகவரி:பிரசன்னா தங்கை மீனா இல்லம் No.6, ஜெ.ஜெ. பிளாட்ஸ், ஜெயராம்  அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை.

ஆழ்ந்த வருத்தங்களுடன் பாரதிதமிழன் இணைச்செயலாளர் சென்னை பத்திரிகையாளர் மன்றம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!