17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » யூத் ரெட் கிராஸ் மாணவிகள் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்.

யூத் ரெட் கிராஸ் மாணவிகள் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்.

எழுதியவர்: mohan June 27, 2019, 6:48 pm

முகம்மது சதக் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மாணவிகள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 40 மாணவிகள் கலந்து கொண்டனர். யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா மாணவிகளை ஒருங்கிணைத்தார். கல்லூரி முதல்வர் நாதிரா பானு கமால்  மாணவிகளை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஊக்குவித்தார். இராமநாதபுர சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமை வகித்தார். ரெட் கிராஸ் மாவட்ட செயலர் ராக்லண்ட் மதுரம் முன்னிலை வகித்தார். எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்களை ஏந்தி கோஷமிட்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!