17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அரசு மருத்துவர்கள் அலட்சியம் கூலி தொழிலாளி மரணம்.

வாணியம்பாடி அரசு மருத்துவர்கள் அலட்சியம் கூலி தொழிலாளி மரணம்.

எழுதியவர்: mohan June 27, 2019, 11:17 am

 வேலூர் மாவட்டம் வாணியம்பாடி துறை யேரி கிராமத்தை சேர்ந்த சிவா (40) இவர் கட்டுமான தொழிலில் கூலி வேலை செய்து வருகின்றார் வெள்ளக்குட்டைUகுதியை சேர்ந்த சக்திவேல் .உதயன் இருவரும் அண்ணன் தம்பிகள்கடந்த ஞாயிறு அன்று துறையே ரியில் உள்ள பொட்டி கடையில் பொருள்கள் வாங்க வந்த சிவாவிடம் இருவரும் தகராறு செய்து உள்ளனர்.அப்போது சக்திவேல், உதயன் இருவரும் சேர்ந்து சிவாவை பிடித்து கொண்டு அடித்து உதைத்து தள்ளி கருங்கற்களால் தாக்கிவிட்டு ஓடி உள்ளனர்.சிவாவை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.சிவாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சக்திவேல், உதயன் (சிவாவின் அக்கா மகன்கள் ) இருவரையும் உடனே கைது செய்யக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர்

 கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!