திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள காமுபிள்ளை சத்திரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, அணைப்பட்டி கள்ளர் மேல்நிலைப்பள்ளி, பள்ளபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, மல்லனம் பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமையில் நடைபெற்றது
.நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன் , நகரச் செயலாளர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன் , ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன்,ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் பாலமுருகன், சேசுராஜ், முருகன், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் முனியப்பன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் , கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை சட்டமன்றத் உறுப்பினர் எஸ், தேன்மொழி சேகர் பேசியதாவது:
நிலக்கோட்டை தாலுகா வைப் பொறுத்தவரை பல்வேறு வகையில் வளர்ச்சி பெற முடியாத நிலை நீடிக்கிறது என்பது நன்கு தெரிந்த விஷயமாகும் . இருப்பினும் பல்வேறு வகையில் பொதுமக்களும் விவசாயிகளும் மாணவ, மாணவிகளும் பாதிக்க பட்டுள்ளார்கள்என்பதைநன்கு அறிவோம். எனவே தற்போது 2017 முதல் 2018 வரை பயின்றார் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. எனவே இங்குள்ள மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் எங்களை அணுகி கோரிக்கையாக விடுத்தார்கள். இந்தக் கோரிக்கையை நான் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் நிச்சயமாக மாணவர்களின வாழ்வாதாரம் பெருக்கக்கூடிய மடிக்கணினியை நிச்சயம் பெற்றுத் தர கோரிக்கை சட்டமன்றத்தில் வைப்பேன் என விழாவில் பேசினார்







You must be logged in to post a comment.