18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் வேண்டுகோள்!

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் வேண்டுகோள்!

எழுதியவர்: mohan June 27, 2019, 9:45 am

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் கிராமப்புறங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் உட்பட அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் காலிக்குடங்களுடன் அலைந்து திரிந்து வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் தண்ணீர் லாரிகளுக்காக மக்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். நடுத்தர மக்கள் குடிநீருக்காக தனியார் தண்ணீர் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில், ஏழை-எளிய மக்கள் குடிநீருக்காக சொல்லொன்னா துயரங்களை தினமும் சந்தித்து வருகின்றனர்.பருவமழை பொய்ப்பை இந்த துயரத்துக்கு காரணமாக அரசு கூறினாலும், அரசின் மெத்தனமும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் முக்கிய காரணமாகும்.

இந்த சூழலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் பணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் ஈடுபடவேண்டும் என நெல்லை முபாரக் கேட்டுக்கொண்டுள்ளார்.ஏற்கனவே இந்த பணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள மோசமான விபரீத நிலைமையை புரிந்துகொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் இன்னும் முழுமையாக தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,

தேவையான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் விநியோகம் செய்வது, அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு பகுதி மக்களுக்கு தேவையான தண்ணீரை முறையாக கிடைக்கச் செய்வது, மழை பெய்தால் மழைநீரை தேக்கிவைப்பதற்கான, மழை நீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதுதொடர்பாக மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதோடு தண்ணீரை வீணாக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் துவக்க தினம் தொடர்பான நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக இதுபோன்ற நடவடிக்கைகளையும் கட்சியின் நிர்வாகிகள் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!