இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆலோசனை கூட்டம் தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி தரம், மேம்பாடு குறித்து பெற்றோர் இடையே கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் நடவடிக்கைகளில் பெற்றோர், ஆசிரியர் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் இப்பள்ளியில் சேர்த்தை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக மு.சோமசுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். நகர் காவல் ஆய்வாளர் கலாராணி, ஆசிரியர் பயிற்றுநர் தேவிஉலகராஜ், இடைநிலை ஆசிரியர் ராமேஸ்வரி, பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம்
எழுதியவர்: mohan June 26, 2019, 7:18 pm




You must be logged in to post a comment.