17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் – எல்லை தாண்டிய ராமேஸ்வரம் மீனவர் 4 பேர் கைது

ராமேஸ்வரம் – எல்லை தாண்டிய ராமேஸ்வரம் மீனவர் 4 பேர் கைது

எழுதியவர்: mohan June 26, 2019, 7:07 pm

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.ராமேஸ்வரம் ராம தீர்த்தர் செல்வராஜ் என்பவரது விசைப்படகில் , தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் துரை ச்சாமி 55, நம்புவேல் 46, செல்வராசு 53,பாலகிருஷ்ணன் 45 ஆகியோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் செல்வராஜ் படகை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாக கூறி 4 மீனவரையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாம் அழைத்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!